மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரிக்க, புலம் பெயர் தொழிலாளர்களே காரணம் எனகூறி, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
தொழில் மாநிலமான மகாராஷ்டிராவில் வேலை பார்க்கும் புலம் பெயர் தொழிலாளர்கள், தேவையான கொரோனா சோதனை வசதிகள் இல்லாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் வாயிலாக தொற்று பரவுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு.
கடந்த முறை ஊரடங்கின் போது சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்களை கொரோனா சோதனை செய்தபிறகே அனுப்ப வேண்டும் என தாம் கூறியதாகவும் ஆனால் அது ஏற்கப்படவில்லை என்றும் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.