ரெப்போ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக நீடிப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மும்பையில், நிதி கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய அவர், ரிவர்ஸ் ரெப்போ எனப்படும் வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி வாங்கும் பணத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாகவே நீடிப்பதாக அவர் கூறினார். நடப்பு நிதி ஆண்டில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதைப் போல் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 10.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதன் காரணமாக, சில மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளால், உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமன்ற தன்மை ஏற்பட்டுள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.