டெல்லியில் நேற்றிரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்த உத்தரவு ஏப்ரல் 30 வரை நீடிக்கும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இரவு பத்து மணி முதல் காலை 5 மணி வரை மெட்ரோ ரயில்கள் பேருந்துகளில் பயணிப்போருக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகம், ஏடிஎம், காவலர்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு செல்வோருக்கு மட்டும் இ பாஸ் வழங்கப்படுகிறது.
சாலையில் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வாகனங்களை போலீசார் வழிமறித்து பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே டெல்லியில் கொரோனாவைத் தடுக்க, இதுவரை 12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.