ஆந்திராவில் சீனியர் மாணவியை ஜுனியர் மாணவன் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடப்பா மாவட்டத்தில் ஐ.ஐ.ஐ.டி. என்ற கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியை முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கல்லூரி விடுதியில் மாணவர்கள் இருதரப்பினராக மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில், 5 மாணவர்கள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.