புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாயன்று நடைபெற உள்ளதை முன்னிட்டுப் பிரச்சாரம் நிறைவடைந்தது.
புதுச்சேரி மாவட்டத்தில் 23 தொகுதிகள், காரைக்கால் மாவட்டத்தில் 5 தொகுதிகள், கேரளத்துக்கு நடுவே உள்ள மாகியில் ஒரு தொகுதி, ஆந்திரத்தின் நடுவே உள்ள ஏனாமில் ஒரு தொகுதி என மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.
இவை அனைத்துக்கும் ஏப்ரல் ஆறாம் நாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஞாயிறு இரவு 7 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.