உத்தரக்கண்ட் மாநிலத்தில் காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
உத்தரக்கண்ட் காட்டுப் பகுதிகளில் 964 இடங்களில் தீப் பற்றி எரிவதாகவும் தீயைக் கட்டுப்படுத்த 12ஆயிரம் வனக் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீயைக் கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் தீரத் சிங் ராவத் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். தீயைக் கட்டுப்படுத்தத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரை அனுப்பவும், ஹெலிகாப்டர்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.