வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும் எனப் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை இப்போது குறையத் தொடங்கியுள்ளதாகவும், வரும் நாட்களில் மேலும் குறைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் பயன் நுகர்வோருக்குக் கிடைக்கும் வகையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படும் எனத் தான் ஏற்கெனவே தெரிவித்ததையும் தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டினார்.