கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து புனேயில் உள்ள உணவகங்கள், திரையரங்குகள், வாரச் சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், மால்களை இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநகர பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல்சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர இன்றிரவு முதல் 12 மணி நேர இரவு ஊரடங்கும் அமலுக்கு வருகிறது. மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 50 பேர்களுடன் திருமணம், 20 பேருடன் இறுதிச்சடங்குக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மற்ற அனைத்து பொது நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் ஒருவார காலத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.புனேயில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அடுத்த 100 நாட்களுக்குள் தடுப்பூசி போடவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்