புதுச்சேரியில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 42 கோடியே 12 ரூபாய் மதிப்பிலான பணம், நகை உள்ளிட்ட பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதிமீறல் தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாளை மாலை 7 மணி முதல் வரும் 7ஆம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகன பேரணி, கூட்டம் கூடுதல், பொதுக்கூட்டம் நடத்துவது, ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவை தடை விதிப்பதாகக் கூறினார். 28 கம்பெனி ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்தார்.