நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு மரபணு மாற்ற வைரஸ் ஒரு காரணமாக இருந்தாலும், முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததே முக்கிய காரணம் என எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குரேலியா தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றவில்லை என்றால் நாடு மிகவும் மோசமான நிலையை சந்திக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தபிறகும் கூட மக்களிடம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் எண்ணம் வரவில்லை என அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தினசரி தொற்று எண்ணிக்கை 70 ஆயிரத்தை தொட பல மாதங்கள் பிடித்தன என்ற அவர், இப்போது வெகு விரைவில் அந்த எண்ணிக்கை வந்து விடும் எனவும் கூறினார்.