தம் மீது கூறிய ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க பிரதமர் மோடி தயாரா என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிய பிரதமர், புதுச்சேரிக்கு தேவையான நிதியை அளித்தாரா எனக் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமர் மோடி எந்த திட்டத்தையும் அறிவிக்காமல் சென்றதாக குற்றம்சாட்டினார்.