கேரளாவில், உத்திரப்பிரேதச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரச்சார பேரணி மேற்கொண்டார்.
திருவனந்தபுரம் காளக்கூட்டம் (Kazhakkoottam) தொகுதியில், சிபிஎம் சார்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பாஜக சார்பில், மாநில துணைத் தலைவர் ஷோபா சுரேந்திரன் களம் காண்கிறார்.
சபரிமலை விவகாரத்தில், போராட்டங்களை முன்னின்று நடத்திய ஷோபா சுரேந்திரன் செல்வாக்கு பெற்றுள்ள இத்தொகுதியில், அவரை ஆதரித்து, உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரச்சார பேரணி மேற்கொண்டார்.