மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 39 தொகுதிகளிலும் 1 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த இரு மாநிலங்களிலும் கடந்த 27-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. 2-வதுகட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது.
இதில் அசாமில் ஓட்டுப் பதிவு நடைபெறும் பகுதிகள் பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ள இடங்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தாபானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் பகுதியிலும் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு பதற்றம் நிலவுவதால் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் 800 கம்பெனி துணை ராணுவபடையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.