கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து. தெலங்கானா மாநிலத்தில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள், அலுவலகங்கள், பேருந்துகள் ஆகிய இடங்களில் முக கவசம் அணியவில்லை என்றால் பல்வேறு தண்டனை பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் அறிவித்துள்ளார்.
அத்துடன் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அனைத்து மத விழாக்கள் மற்றும் பண்டிகைகளை பொதுவெளியில் கொண்டாடவும் தடை விதிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.