கொரோனா கட்டுப்பாட்டுக்காக கடந்த ஆண்டு இந்தியா அறிமுகப்படுத்திய மக்கள் ஊரடங்கு ஒட்டுமொத்த உலகிற்கே உத்வேகமாக அமைந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மனதின் குரல் எனப்படும் மன்கி பாத்தின் 75 ஆவது உரையில் மோடி இவ்வாறு கூறினார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா நடத்தி வருவதாக மோடி கூறினார்.
கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனர் மாரிமுத்து யோகானந்தன் என்பவர் பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குவதை குறிப்பிட்ட மோடி அவருக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.
புதிய நம்பிக்கைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும் நாட்டின் பல மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுவதாக மோடி கூறினார்.
மார்ச் மாதம் உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், பல இந்திய விளையாட்டு வீராங்கனைகள் பதக்கங்களை பெற்றதற்கு பாராட்டு தெரிவித்தார். 10 ஆயிரம் ரன்களை குவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜையும் பிரதமர் மோடி பாராட்டினார்.