கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த, 100 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்குமாறு பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் இப்போது ஐதராபாத்தில் உள்ள தனது ஆலையில் மாதம் ஒன்றுக்கு 40 லட்சம் டோசுகள் கோவேக்சினை தயாரிக்கிறது. அந்த நிறுவனத்தை தடுப்பூசிக்கான மத்திய அமைச்சரவை குழு பார்வையிட்டு உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தியது.
இந்த நிலையில் மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்பட்டுள்ளது. அதைப் போன்று சீரம் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை 10 கோடியாக அதிகரிக்க திட்டமிட்டு அதற்காக மத்திய அரசிடம் வாய்மொழியாக நிதியுதவி கேட்டுள்ளது.
கோவிட் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த 2 நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உதவி அளிக்கும் என கூறப்படுகிறது.