கேரளாவில் தேர்தல் நடக்கும் முன்பே 3 தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது.
கேரள சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தலசேரி தொகுதியில் வேட்பு மனுவில் அனைத்து விபரங்களையும் சரியாக குறிப்பிடாததால் பா.ஜ.க. வேட்பாளர் ஹரிதாசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இது போல மாநில தலைவரின் பெயரை சரியாக குறிப்பிடாததால் குருவாயூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நிவேதிதா, மனுவும் தள்ளுபடி ஆனது. தேவிகுளம் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர் தனலெட்சுமி,விபரங்களை சரியாக குறிப்பிடாததால் மனு தள்ளுபடி ஆனது.