கிழக்கு லடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்துள்ளதாக சீன ராணுவம் கூறியுள்ளது.
இதுகுறித்து பீஜிங் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு ராணுவ அமைச்ச செய்தி தொடர்பாளர் ரென் குவாகியாங்,
கிழக்கு லடாக்கில் பதற்றம் முற்றிலும் தணிந்துள்ளது என்றார். அங்கு படைகளை விலக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார். அதேநேரம் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இன்னும் நிறுத்தப்பட்டிருக்கும் மீதமுள்ள படையினரை விலக்குவது குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.