அசாமில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் லவ் ஜிகாத்தையும், சட்டவிரோத ஊடுருவலையும் தடுக்கச் சட்டம் இயற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கமல்பூரில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, அசாமியப் பண்பாட்டையும் நாகரிகத்தையும் காக்கத் தேவையான சட்டங்கள் இயற்றப்படும் எனத் தெரிவித்தார். அசாமின் அடையாளம் பத்ருதீன் அஜ்மல் என ராகுல்காந்தி தெரிவித்ததைக் குறைகூறிய அமித் ஷா, வைணவத் துறவியரான சங்கர் தேவா, மாதவதேவா, அகோம் தளபதி பர்புகன் ஆகியோரே அசாமின் அடையாளம் எனக் குறிப்பிட்டார்.
வளர்ச்சிக்கான இரட்டை எஞ்சின் கொண்ட பாஜக வேண்டுமா? சட்டவிரோத ஊடுருவலுக்கு வகை செய்யும் காங்கிரஸ் வேண்டுமா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.