தான்சானியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த இஸ்ரேலிய சரக்குக் கப்பலை ஈரான் ஏவுகணை மூலம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இஸ்ரேலின் சேனல் 12 என்ற தொலைக்காட்சி செய்திச் சேனல் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேலின் XT Management நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் தான்சானியாவில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் வழியில் ஈரானால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
லேசான சேதம் ஏற்பட்டதால் அந்தக் கப்பல் துறைமுக நகரமான ஹைஃபாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சேனல் 12 கூறியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.