நாடு தழுவிய அளவில் 11 மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பல்வேறு வங்கிகளிடம் பெற்ற 3700 கோடி ரூபாய் கடன் மோசடி தொடர்பான புகார்களை அடுத்து நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களின் சொத்துகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐடிபிஐ, கனரா வங்கி,இந்தியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் இது தொடர்பான புகார்களை அளித்துள்ளன.
டெல்லி, கான்புர், மதுரா, சென்னை , திருவாரூர்,வேலூர், திருப்பூர், பெங்களூர், குண்டூர், ஹைதராபாத்,மும்பை,பெல்லாரி , சூரத் அகமதாபாத், திருப்பதி ,விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.