சுமார் 25 லட்சம் போலி கணக்குகள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றதாக DHFL இயக்குனர்கள் இருவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டத்தை திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
மும்பை பாந்த்ராவில் போலி அலுவலகம் மூலம் கடந்த 2017-19ம் ஆண்டுகளுக்கு இடையில் போலி கணக்குகள் மூலம் வீட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.