பிரதமர் மோடி நாளை வங்காள தேசத்திற்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். கொரோனா ஊரடங்குகளுக்குப் பிறகு பிரதமர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
டாக்காவில் அதிபர் முகமது அப்துல் ஹமீத் மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் சுகாதாரம், ரயில்வே, எல்லைப்புற மேம்பாடு, தொழில் வளர்ச்சி தொடர்பான முக்கிய உடன்பாடுகள் கையெழுத்தாகும் என்றும் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிருங்காலா தெரிவித்துள்ளார்.
மோடி இந்தப்பயணம் இரு நாடு உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.