பெட்ரோல், டீசலை அடுத்த 8 முதல் 10 ஆண்டுகள் வரை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர முடியாது என பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், மத்திய, மாநில அரசுகள் கூட்டாக பெட்ரோலிய பொருட்கள் மீது 5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி வசூலிப்பதாகத் தெரிவித்தார்.
பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கொண்டு வந்தால் அனைத்து மாநிலங்களுக்கும் ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே அடுத்த எட்டு முதல் 10 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி ஆட்சியின் கீழ் கொண்டு வர முடியாது எனவும் சுஷில்குமார் மோடி குறிப்பிட்டார்.