அனைத்து வகை வட்டிகளையும் ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து தனியார் வங்கிகளின் சந்தை மதிப்பு கூடியது.
பங்குச் சந்தையில் வங்கிகளுக்கு நேற்று ஏறுமுகம் காணப்பட்டது. கொரோனா பேரிடர்காலத்தில் வங்கிக் கடன்களை பெற்று ஆறுமாதங்களுக்கு தவணைத் தொகை செலுத்தாதவர்களின் வட்டிக்கு தாமத வட்டியை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆயினும் அனைத்து வட்டிகளையும் ரத்து செய்ய முடியாது என்றும் ஆறுமாத கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்கு வணிகம் ஏற்றம் கண்டது.
இதனால் கடந்த சில நாட்களாக சரிவைக் கண்டு வந்த மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்ந்தது. இதே போல் தேசியப்பங்குச் சந்தையான நிப்டியிலும் 78 புள்ளிகள் ஏற்றம் காணப்பட்டது.
IndusInd Bank, ICICI Bank, HDFC Bank, Titan, Axis Bank, போன்ற தனியார் வங்கிகளுக்கு இதனால் நல்ல பலன் கிடைத்தது.