கேரள மாநிலம் ஆழப்புழாவுக்கு 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் ஆட்சியாளர்கள் செய்து தரவில்லை.
குடிநீருக்காகவும் அந்த கிராமத்தின் மக்கள் பல மணி நேரம் நடக்க வேண்டியிருக்கிறது. வளர்ச்சிப் பணிகள் எதுவுமே இந்தியாவின் இத்தகைய கிராமங்களுக்கு சென்றடையாததால் இங்குள்ள மக்கள் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தேர்தலில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு பின்னர் காற்றில் பறக்க விடப்படுவதாக இந்த கிராமத்தில் உள்ளவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.