மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மகாராஷ்ட்ரா சிவசேனா கூட்டணி அரசு தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம்தோறும் 100 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டியதையும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்றத்தில் இவ்விவகாரத்தை எழுப்பிய சுயேட்சை வேட்பாளர் மகாராஷ்ட்ராவின் அமராவதி தொகுதி மக்களவை உறுப்பினரான நடிகை நவ்நீத் கவுர் ரானா தம்மை கைது செய்யப் போவதாகவும் முகத்தில் ஆசிட் வீசுப் போவதாகவும் சிவசேனா மிரட்டல் விடுத்திருப்பதாக புகார் தெரிவித்தார்.