கோவிஷீல்ட் தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி காலத்தை அதிகரிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இரண்டாவது டோசை 4 முதல் 6 வாரங்களில் செலுத்த வேண்டும் என்று முன்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இதனை 4 முதல் 8 வாரங்கள் வரை நீட்டிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அண்மைக்கால அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் இரு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி காலம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது கோவிஷீல்டுக்கு மட்டும்தான் என்றும் பாரத் பயோடெக்கின் தடுப்பு மருந்தான கோவாக்சினுக்குப் பொருந்தாது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.