அசாமுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் வருகை என்பது ஒரு பிக்னிக் போன்றது மட்டுமே என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உடால்குரி என்ற இடத்தில் நடந்த பாஜக பிரச்சாரக்கூட்டத்தில் அமித் ஷா பேசினார்.
அசாமில் தொழிலாளர்களின் நிலைமையை பற்றி ராகுல் பேசுவது தமக்கு சிரிப்பை வரவழைப்பதாக கூறிய அமித் ஷா, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அசாம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக எதுவும் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.