உத்தரகாண்ட் முதலமைச்சர் திரத் சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், தான் நலமாக இருப்பதாகவும் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 10 ஆம் தேதி திரத் சிங் ராவத் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.