இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் கண்டனத் தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமைகள் மீறல் அதிகரித்துள்ளதாகக் கூறி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தின் மீது நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை மீதான கண்டனத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடியை திமுக, பாமக மற்றும் மதிமுக கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.