கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாததும் புதிய வகை கொரோனாவுமே இந்தியாவில் தொற்று பரவல் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்று எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா,தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், தடுப்பூசி வந்துவிட்டதால் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக மக்கள் நினைத்து முக கவசம் அணிவதை பெரும்பாலும் கைவிட்டு விட்டனர் என்றார்.
பரிசோதனை செய்தல், தடம் கண்டறிதல், தனிமைப்படுத்துதல் என்ற அடிப்படை கொள்கையை தீவிரமாக பின்பற்றவில்லை என்று கூறிய அவர், மற்றொரு அம்சம் என்னவென்றால், வைரசும் உருமாறிக்கொண்டுள்ளது என்றார்.