அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தோ பசிபிக் பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்டின், ஜெய்சங்கருடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்தியாவுக்கு மேலும் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாக பாதுகாப்பு உபகரணங்கள் விற்பனையை அமெரிக்கா அங்கீகரித்தது இருநாடுகளிடையே உறவை மேலும் வலுப்படுத்தும் என ஆஸ்டின் கூறியுள்ளார்.
இந்திய, பசிபிக் பிராந்தியத்தில் தற்போதைய பாதுகாப்பு சவால்கள் மற்றும் நீண்ட கால பாதுகாப்பு குறித்து இருநாட்டு அமைச்சர்களும் விவாதித்தனர்.