மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு முறை பா.ஜ.க.வுக்கு ஆளும் வாய்ப்பை அளித்தால், ஆயுள் முழுவதும் தொண்டாற்ற தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அந்த மாநிலத்தின் காரக்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் திரிணாமுல் கட்சிகளும் ஆட்சியால், மேற்கு வங்கம் 70 ஆண்டுகளாக எந்த முன்னேற்றத்தையும், காணவில்லை என்றார். பா.ஜ.க.வுக்கு ஒருமுறை ஆளும் வாய்ப்பை வழங்கினால், இந்த 70 ஆண்டு பின்னடவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார்.
வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவை 55 நிமிடங்கள் முடங்கியதை சுட்டிக்காட்டிய அவர், இதே போன்று மேற்கு வங்கமும் 55 ஆண்டுகள் பின் தங்கி உள்ளது என்றார். திரிணாமுல் ஆட்சியால் தொழிற்சாலைகள் மூடப்படுவதாக கூறிய அவர்,பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தொழில் வளர்ச்சி உருவாகும் என்றார்.