கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு ஆளும் இடதுசாரி தலைமையிலான கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தரப்படும் என்றும் குடும்பப் பெண்களுக்கான ஓய்வூதியம் 2500 ரூபாய் வரை படிப்படியாக உயர்த்தப்படும் உள்ளிட்ட கவர்ச்சித் திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
கடல் அரிப்பைத் தடுக்கவும் கரையோரம் வசிக்கும் மக்கள் வளர்ச்சிக்கு 5 ஆயிரம் கோடி ரூபாயில் திட்டம் போன்ற திட்டங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஊழலற்ற அரசு என்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கட்சியின் மாநில பொறுப்புத் தலைவர் விஜயராகவன் தெரிவித்தார்.