உலகின் பல்வேறு நாடுகளில் இரவு 11 மணியளவில் திடீரென வாட்ஸ் ஆப், முகநூல், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கின.
இதனால் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் கோடிக்கணக்கான பயனாளர்கள் தவித்தனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த முடக்கம் காணப்பட்டது. இதனால் டிவிட்டர் மூலமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட பொதுமக்கள் வாட்ஸ் ஆப் முடங்கிய தகவலையும் சமூக ஊடகங்களில் பரப்பினர்.
சர்வரில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய நிபுணர்குழுவினர் தீவிர முயற்சியெடுத்ததன் பலனாக 40 நிமிடங்களுக்குப் பிறகு பேஸ்புக் நிறுவனத்தின் சேவைகள் இயல்பு நிலை திரும்பியன.