இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரும் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மராத்தா இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கின் விசாரணையை அசோக் பூசன் தலைமையிலான 5 நீதிபதிகளின் அமர்வு மேற்கொண்டது.
மகாராஷ்ட்ரா அரசுத் தரப்பில் வாதிட்ட முகுல் ரோத்தகி, இட ஒதுக்கீட்டிற்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்ற மண்டல் கமிஷன் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினார்.
இப்பிரச்சினையை தனியாக கையாள வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்த நீதிபதிகள் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.
70 ஆண்டுகளாக பல்வேறு மத்திய மாநில அரசுகள் இத்தனை நலத் திட்டங்கள் வகுத்தபோதும் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்றும், எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் முன்னேறவில்லை என்றும் கூறலாமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.