மேற்குவங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் சுவேந்து-வின் பொதுக்கூட்டத்தில் மோதல் மூண்டது.
பாரதிய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதையடுத்து நந்திகிராம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பதற்றமான இடங்களில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பாரதிய ஜனதா கட்சியினர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் வேண்டுமென்றே வன்முறையை தூண்டிவிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரசிஸ் புகார் அளித்துள்ளது.