சுங்கச்சாவடிகள் இல்லாத நெடுஞ்சாலைகளை ஓராண்டில் காண முடியும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் நேற்று அறிவித்தார்.
ஜிபிஎஸ் முறையில் வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதே போல் பழைய வாகனங்களை கழித்துக் கட்டும் அரசின் கொள்கைகளை அவர் வெளியிட்டார். இதன் மூலம் ஆட்டோமொபைல் துறையின் லாபம் இரட்டிப்பாகும் என்றும் அவர் கூறினார்.
சாலை விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிதின் கட்கரி கொரோனாவை விட அதிகமான உயிர்களை விபத்துகள் பலி வாங்கி விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டார்.