மேற்கு வங்கத்தில் வெற்றிபெற்றால் அடுத்த குறி மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவது தான் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அம்லாசுலி, கரக்பூர் ஆகிய இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்களில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மம்தா பானர்ஜி பேசினார்.
அம்பன் புயலுக்குப் பின் மாநில அரசு மக்களுக்கு இழப்பீடு கொடுத்ததாகவும், மத்திய அரசு இழப்பீடு வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கவே பாஜக பணத்தைச் செலவழிப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
மக்களுக்கு மட்டுமே தலைவணங்க முடியும் என்றும், வேறெவருக்கும் பணிய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். எதற்கும் அஞ்சி ஒதுங்காமல் மக்களுக்காகத் தொடர்ந்து போராடப்போவதாகவும் சூளுரைத்தார்.