ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்குவாங்கி தமது அரசை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லி அரசு என்றால் அது துணை நிலை ஆளுநர்தான் என்ற நிலையை ஏற்படுத்தக் கூடிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாக அவர் NCT சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைக் குறைக்க மத்திய அரசு தேசிய தலைநகர் சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வர முயற்சிப்பதாக விமர்சித்த கெஜ்ரிவால், இந்த சட்டம் அலுக்கு வந்தால் முதலமைச்சர் எங்கே போவார் என்று கேள்வி எழுப்பினார்.