பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து, உத்தரகண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத் (Tirath Singh Rawat) கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டேராடூனில் (Dehradun) குழந்தைகள் பாதுகாப்பு நல ஆணையம் ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், தான் விமானத்தில் பயணம் செய்த போது, குழந்தையுடன் இருந்த பெண் ஒருவர் கிழிந்த ஜீன்ஸ் அணிந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த அந்த பெண் சமூகத்திற்கு முன்வைக்கும் முன்மாதிரி குறித்து கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.