தங்கள் நாட்டுடன் சமாதானம் மேற்கொண்டால் மத்திய ஆசியாவில் இந்தியாவின் மதிப்பு உயரும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையே ஒரே பிரச்சினை காஷ்மீர் தான் என்றும் அவர் கூறினார். இந்தியாவுடன் வர்த்தகம் தேவை என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் பிரதமர், இருநாடுகளும் அமைதியை ஏற்றுக் கொண்டால் ஒட்டு மொத்த பிராந்தியமே பயன் பெறும் என்று கூறியுள்ளார்.
இரு நாட்டு எல்லை கமாண்டர்களும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பதாக உறுதி ஏற்றதையடுத்து எல்லையில் பாகிஸ்தான் படைகளின் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்துள்ளது.