ஸ்ரீராம பாதை யாத்திரைக்கான சிறப்பு ரயிலுக்கு முன்பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கியது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து அயோத்தி வரை இந்த ரயில் வரும் 17ம் தேதி தொடங்கி 5 நாள் ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறது.
நந்திகிராம், பிரயாக் ராஜ், சித்ரகூட் வழியாக உள்ள முக்கிய வைணவக் கோவில்களை இந்த ரயில் வலம் வர உள்ளது. இதற்கான கட்டணம் 4 ஆயிரத்து 725 ரூபாயாகும்.
மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணம் 5 ஆயிரத்து 775 ரூபாய். இந்த கட்டணம் மூலம் பயணிக்கு 4 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். தங்குமிடம் உணவு, போன்றவை இலவசமாக வழங்கப்படும்.
இதே போன்று ஜம்மு காஷ்மீர் பாரம்பரிய சுற்றுலாவுக்கும் ஹரிதுவார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, ஆகிய புனித நகரங்களுக்கும் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது.