வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று வரும் 26 மற்றும் 27ம் தேதி பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா, வங்காள தேசத்தின் பொன்விழா மற்றும் இந்தியா வங்காளத்தின் நட்பை பாராட்டும் 50 ஆண்டு விழா ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை ஒட்டி பிரதமர் மோடி டாக்கா செல்கிறார்.
வங்காளப் பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பல்வேறு முக்கிய வர்த்தக ராஜாங்க விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அப்துல் ஹமீதையும் சந்தித்துப் பேச்சு நடத்த உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.