காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சோபியான் மாவட்டம் ராவல்போரா என்ற இடத்தை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தி, பதுங்கியிருந்த இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தது தெரியவந்தது.
சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து எம் 4 கார்பைன் ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.