உலகிலேயே டெல்லிதான் அதிகமான மாசடைந்த நகரம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காற்று மாசு நிலையில் நகரங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த ஸ்விஸ் நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று. உலகின் 106 முக்கிய நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்தது.
அதில் 84 சதவீத நகரங்களில் காற்று மாசு குறைந்து முன்னேற்றம் காணப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிகவும் மாசடைந்த 14 நகரங்களில் சீனாவின் ஹோட்டான் நகரைத் தவிர மற்ற 13 இடங்கள் இந்தியாவில் இருப்பதாக அதில குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வங்காளதேசமும் பாகிஸ்தானும்தான் மிகவும் மாசடைந்த நாடுகள் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.