எல்லா வங்கிகளையும் தனியார்மயமாக்கும் எண்ணமில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கிகளின் தனியார் மயமாக்கலைக் கண்டித்து பத்துலட்சத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் அனைத்தும் முடங்கின.
ஏடிஎம்களும் வறண்டு காணப்பட்டன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், சில வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் போது அதில் பணியாற்றும் ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்து டிவிட்டர் பதிவிட்ட ராகுல் காந்திக்கு பதிலளித்த நிதியமைச்சர், காங்கிரஸ் தலைமையிலான அரசு பொதுமக்கள் சொத்துகளை தனிநபர் சொத்துகளாக மாற்றியதாக சாடினார்.