24 வாரங்கள் வரை வளர்ந்திருக்கும் கருவைக் கலைக்கும் அனுமதிக்கும் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத சூழ்நிலைகளின் காரணமாக தங்களது கருவை கலைக்க விரும்பினால், 20 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க வழி செய்யும் சட்டங்கள் நாட்டில் நடைமுறையில் உள்ளன.
1971ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவைத் திருத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்திருந்தது. இதையடுத்து கூடுதலாக 4 வாரங்களை அனுமதித்து அதற்கான மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.