கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் திரையரங்குகள், உணவு விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகள் மூடப்படும் என மகாராஷ்டிர அரசு எச்சரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்குவதுடன், இறப்பு எண்ணிக்கையும் 11 ஆயிரத்து 500 ஐ கடந்துள்ளது. இந்த நிலையில் இம்மாத இறுதி வரை அதிக கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கி உள்ள மாநில அரசு, திரையரங்குகள், ஹோட்டல்களில் 50 சதவிகித அளவிற்கே ஆட்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சியில் 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேரும் மட்டுமே பங்கேற்கலாம் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.